லிஃப்டில் சிக்கிய 6 வயது சிறுவன் சிகிச்சைப் பலனின்றி பலி

தெலங்கானா மாநிலம் நம்பள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு லிஃப்டில் சிக்கி காயமடைந்த சிறுவன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அர்னவ் (6) என்ற சிறுவன் நேற்று அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிஃப்டில் சிக்கிக்கொண்டார். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புக் குழுவினர், பல மணி நேரம் போராடி சிறுவனை மீட்டனர். மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.
Tags :