பட்டப்பகலில் தொழிலதிபர் வெட்டிக் கொலை

by Editor / 05-08-2025 04:21:39pm
 பட்டப்பகலில் தொழிலதிபர் வெட்டிக் கொலை

நாமக்கல்: பட்டப்பகலில் தனியார் நிதி நிறுவன தொழிலதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருள்தாஸ் (45) என்பவர் உடற்பயிற்சி கூடம் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளார். அப்போது அருள்தாசை வழிமறித்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்நிலையில், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அருள்தாஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது

 

Tags :

Share via