ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில்

சென்னை தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :