வசதியற்ற ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் மூலம் அரசு உதவி செய்வதை வரவேற்கிறோம்-உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த்
வசதியற்ற ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் மூலம் அரசு உதவி செய்வதை வரவேற்கிறோம் .அது அரசின் கடமை . ஆனால் ,ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் இலவசங்களை வழங்குவது தேசத்தின் பொருளாதார வளர்ச்சியை பாவிக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் ஒரு விசாரணையின் போது தெரிவித்தார்..ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் இலவசங்களை வழங்குவது தேசத்தின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும் காலையில் இருந்து மாலை வரை உணவு சைக்கிள் மின்சாரம் என அனைத்தும் இலவசமாக கிடைத்தால் மக்கள் எப்படி வேலை செய்வார்கள். இது நாட்டின் உழைக்கும் கலாச்சாரத்தை என்ன வாக்கும் என்றும் இலவசங்களுக்காக செலவிடும் நிதியை கொண்டு தரமான சாலைகள் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை உருவாக்கலாம் என்றும் பல மாநிலங்கள் நிதி பற்றாக்குறையிலிருந்தும் வளர்ச்சிக்கான திட்டங்களை விட இலவசங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக நீதிபதி வேதனையோடு தெரிவித்தார்.தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்பான ஒரு வழக்கின் பொழுது தலைமை நீதிபதி அமர்வு இந்த கருத்துக்களை தெரிவித்தது.
Tags :


















