கேரளாவில் சிகிச்சைக்கு வந்த மாணவியிடம் பாலியல் தொல்லை மருத்துவர் கைது

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பிசியோதெரபி சிகிச்சைக்காக வந்த மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய பிசியோதெரபிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இடுக்கி மேரிகிரியைச் சேர்ந்த ஷின்டோ தாமஸ் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். உடற்கல்வி கல்லூரியில் பிபிடி படிக்கும் மாணவியிடம் இவர் தவறாக நடந்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்தப் மாணவி தனது தோள்பட்டை சிகிச்சைக்காக பிசியோதெரபி மையத்திற்கு வந்த நிலையில், அறைக்குள் வைத்து அத்துமீறியுள்ளார். மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
Tags : கேரளாவில் சிகிச்சைக்கு வந்த மாணவியிடம் பாலியல் தொல்லை மருத்துவர் கைது