அமித் ஷா மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம்
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக மதுரை வந்துள்ளார். மதுரை வந்த அமித் ஷா-வுக்கு பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட மூத்த நிர்வாகிகள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் அமித் ஷா மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். இதனால் மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags : அமித் ஷா மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம்



















