தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்- ராஜஸ்தான் மாநில இளைஞர் கைது
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் அமைந்துள்ள ராஜாராம் எலக்ட்ரிக்கல் ஷாப் குடோனில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் குடோனில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்
சோதனையில் அரசினால் தடைசெய்யப்பட்ட புகையில் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து குடோனில் இருந்த வட மாநில இளைஞர் (ராஜஸ்தான்) ஹிராராம் சவுத்ரியை கைது செய்த போலீசார் 4 மூடைகளில் பதுக்கி வைத்திருந்த குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் .பறிமுதல் செய்யபட்ட புகையிலை பொருட்கள் 1 லட்ச ரூபாய் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :