பாரதிராஜா மகன் மரணம் தமிழ் திரையுலம் சோகம்.

by Editor / 26-03-2025 12:11:49am
 பாரதிராஜா மகன் மரணம் தமிழ் திரையுலம்  சோகம்.

இயக்குனரும்,நடிகருமான மனோஜ் பாரதிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், இதய பிரச்னையை சரி செய்துவிடலாம் என்று, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. இப்படியாக, கடந்த 6 நாட்களுக்கு முன்பாகத்தான் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார் மனோஜ் பாரதி. 

இந்த நிலையில், சிறுநீரகம் செயலிழந்ததாலும், அறுவை சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காததாலும், இன்றைய தினம் அவரது உயிர் பிரிந்தது. சென்னை சேத்பட்டில் இருக்கும் வீட்டில் இருந்தபோது 25 ஆம் தேதி மாலை 6 மணியளவில் மனோஜ் பாரதி மரணித்துள்ளார். 

மலையாள நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட மனோஜுக்கு இரு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், அவரது மறைவு உறவினர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


 

 

Tags : பாரதிராஜா மகன் மரணம் தமிழ் திரையுலம் சோகம்.

Share via