பில்கிஸ் பானு வழக்கு: விடுதலை செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

by Staff / 08-01-2024 12:18:47pm
பில்கிஸ் பானு வழக்கு: விடுதலை செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. பில்கிஸ் பானு வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 14 பேர் மார்ச் 3ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர் . அத்துடன் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

 

Tags :

Share via

More stories