மதுரை மீனாட்சி அம்மன்கோவில் சித்திரை திருவிழா இன்று 9ம் நாள் திருவிழா  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

by Editor / 07-05-2025 11:25:41pm
மதுரை மீனாட்சி அம்மன்கோவில் சித்திரை திருவிழா இன்று 9ம் நாள் திருவிழா  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.. 

இவ்விழாவினை முன்னிட்டு நாள்தோறும் அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துவருகின்றனர். 

இந்நிலையில் விழாவின் 9 ஆம் நாள் நிகழ்வாக   மீனாட்சியம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடை சமேதராக இந்திர விமான வாகனத்தில் எழுந்தருளியபடி கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி வழியாக கீழமாசி, தெற்குமாசி, மேலமாசி, வடக்கு மாசி வீதிகளில்  வீதி உலா வலம்வந்தனர். 

வடக்கு மாசி வீதி, கீழ மாசி வீதி சந்திப்பு இடத்தில் உள்ள லாலாஸ்ரீ ரெங்க சத்திரம் திருக்கண் மண்டபத்திற்கு எழுந்தருளி  மீனாட்சி அம்மன் திக்கு விஜயம் மீனாட்சியம்மை தடாதகைப் பிராட்டியாக மதுரையம்பதியில் அவதரித்து, ஆட்சி புரிகையில் மேற்கொண்ட திக்கு விஜய புராண வரலாற்று நிகழ்வினைக் குறிக்கும் வகையில், மீனாட்சிம்மனின் திக்கு விஜயம் நடைபெற்றது. அப்பொழுது அம்மன், அஷ்டதிக்கு பாலர்களை எதிர்த்து வெற்றி பெற்ற லீலை நடைபெற்றது.  இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

சுவாமியும் அம்மனும் நான்கு மாசி வீதிகளில்  உலா வந்தபோது வீதிகள் முழுவதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனையும் சுவாமியையும் தரிசனம் செய்தனர்.

சுவாமி அம்மன் வீதி உலாவின் போது சுவாமியின் முன்பாக ஏராளமான சிறுமிகள் மீனாட்சியம்மன் ,சிவபெருமான், முருகர், ஆண்டாள், கிருஷ்ணன், வேடம் அணிந்தும் சிறுவர்கள்  உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் வேடங்களை அணிந்தும் பல்வேறு இசைவாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர்.

 

Tags : மதுரை மீனாட்சி அம்மன்கோவில் சித்திரை திருவிழா இன்று 9ம் நாள் திருவிழா  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Share via