மாயாவதி – உ.பி., உத்தர்காண்ட்டில் தனித்து போட்டி

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில், ஓவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் மாயாவதி கூட்டணி அமைப்பார் என கூறப்பட்டது.
Also Read கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை! - நடந்தது என்ன?
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாயாவதி, மீடியாக்களில் வரும் ஏஐஎம்ஐஎம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி குறித்த செய்திகள் முற்றிலும் தவறு மற்றும் ஆதாரமற்றது என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை பகுஜன் சமாஜ் கட்சி மறுக்கிறது என குறிப்பிட்டுள்ள மாயாவதி, பஞ்சாபை தவிர, உத்தரப்பிரதேசம், உத்தர்கண்டில் கூட்டணி அமைத்து போட்டியிட மாட்டோம் என்றும் அங்கு தனித்து போட்டியிட உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags :