அம்மா ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன எடப்பாடி குற்றச்சாட்டு

by Staff / 27-01-2023 04:43:08pm
அம்மா ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன எடப்பாடி குற்றச்சாட்டு

அம்மா ஆட்சியில் கொண்டுவந்த அனைத்து நல்ல திட்டங்களையும் நிறுத்தியது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்று முன்னாள் முதலமைச்சர் அஇஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார் ஈரோடு ஆலயமணி மஹாலில் தேர்தல் பணிக்குழு ஆய்வுக் கூட்டத்தில் அவர் தலைமை தாங்கி பேசியதாவது அதிமுக ஆட்சியில் பலநலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன ரூபாய் 12000 மதிப்புள்ள லேப்டாப்புகள் 55 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன ரூ2500 பழங்கால பரிசாக அனைத்து மக்களுக்கும் வழங்கினோம் ஆனால் திமுக ஆட்சியில் 21 மளிகை பொருட்கள் பொங்கல் தொகுப்பாக வழங்கப்பட்டது ஆனால் அதை மக்கள் என்றுமே மறக்க முடியாது வெல்லம் வாங்கும்போது ஒழுகிக் கொண்டே சென்றது வெல்லத்தை சேலம் அல்லது ஈரோட்டில் வாங்கி இருக்கலாம் ஆனால் அதை வெளியூரில் வாங்கினார்கள் எதற்காக என்றால் கமிஷனுக்காக பிறகு திட்டமிட்டு கலெக்ஷன் அதன் மூலம் கரப்ஷன் என்பது தான் அவர்களின் கொள்கையாகும் நடப்பாண்டு பொங்கல் தொகுப்பை நிறுத்தி விட்டார்கள் ரூஆயிரம் வழங்குவதாக கூறினார்கள் போராட்டம் அறிவித்த பிறகு தான் கரும்பு கூட வழங்கப்பட்டது தாலிக்கு தங்கம் மகளிர்க்கு ஸ்கூட்டி உட்படஅம்மா ஆட்சி கொண்டு வந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டன ஈரோடு கிழக்கு தொகுதி ஈரோடு மாநகராட்சி உட்பட்டதாகும் இந்த மாநகராட்சியில் ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம் அதையும் தற்போது சிறப்பாக செயல்படுத்தவில்லை அதேபோன்று அத்திக்கடவு அவிநாசி திட்டம் அம்மாவாசையில் கொண்டு வந்தது கொண்டு வந்தது என்பதாலேயே கடந்த 20 மாதங்களாக பணிகளை முடிக்கவில்லை அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மருத்துவ கல்லூரி சேர 7. 5% இட ஒதுக்கீடு வழங்கியது அதிமுக அரசு அவர்கள் ஒரு பைசா செலவில்லாமல் படிக்க வழி செய்தது இதை எதிர்க்கட்சிகள் வேறு யாருமே கேட்கவில்லை ஆனால் அதை நாம் செய்தோம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டி அதிமுகவினர் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு சேகரிக்கலாம் ஏனென்றால் திமுக கொடுத்த வாக்குறுதிகள் 20 மாதங்களாகியும் நிறைவேற்றப்படவில்லை குறிப்பாக மகளிர்க்கு மாதம் ஒரு ரூபாய் 1000 ஆயிரம் கேஸ் மானியம் ரூபாய் 100 முதியோர் ஓய்வு ஊதியம் ரூபாய் 1500 உயர்த்தப்படும் என்றனர்செய்யவில்லை மாறாக நமது ஆட்சியில் வழங்கப்பட்ட ஓய்வூதியம் பலருக்கு நிறுத்தப்பட்டுள்ளது இதையெல்லாம் சுட்டிக்காட்டி வாக்குகள் சேகரிக்க வேண்டும் ஒவ்வொரு தொண்டரும் தானே தேர்தல் களத்தில் நிற்பதாக கருதி தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அதிமுக பெற்றது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்

 

Tags :

Share via