மக்கள் பாஜகவினரை விரட்டி அடித்துள்ளனர் - திருமாவளவன்

“கர்நாடக தேர்தலில் மக்கள் பாஜகவினரை விரட்டி அடித்துள்ளனர் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'ஹிஜாப் விவகாரம், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து போன்றவற்றால் கடந்த தேர்தலை விட 30 தொகுதிகளை பாஜக இழந்துள்ளதாகவும், பாஜக வழக்கம்போல் குதிரை பேரம் உள்ளிட்ட ஜனநாயக விரோத செயல்களை செய்வார்கள் எனவும் கூறியுள்ளார். கட்டுக்கோப்புடன் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்' என்றார். கர்நாடகாவில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் காங்கிரஸ் 43% பெற்றுள்ளது. 134 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
Tags :