மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு ...தங்கம் தென்னரசு

by Staff / 19-02-2024 11:31:28am
மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு ...தங்கம் தென்னரசு

சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மேலும் 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த அவர், பாடநூல் கழகம் மூலமாக அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும். தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ,5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும். ரூ.65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories