கணவன், மனைவிக்கு அரிவாள் வெட்டு
செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அடுத்த தொண்டமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் 38. இவருக்கும் தண்டரை கிராமத்தை சேர்ந்த சூர்யா 28 இடையே பனங்கள்ளு இறக்குவதில் சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜெயராமன் தனது மனைவி மலர் உடன் இரு சக்கர வாகனத்தில் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பவுஞ்சூர் சென்று வீடு திரும்பியுள்ளார்,இதை அறிந்த சூர்யா பாலூர் அரசு மதுபான கடை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஜெயராமனை வழி மறித்து, மறைத்து வைத்திருந்த அறிவாலால் கை, கால், தலை ஆகிய பகுதிகளில் வெட்டியுள்ளார், இதை தடுக்க முயற்சித்த ஜெயராமன் மனைவி மலரின் கையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அணைக்கட்டு காவல்துறையினர் வழக்குப்பதிந்து, இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, இரண்டு பேரை அறிவாளல் வெட்டிவிட்டு தப்பிச்சென்ற சூரியாவை தேடி வருகின்றனர். இந்த செய்தி அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags :















.png)


.jpg)
