மேற்குவங்கத்தை சேர்ந்த இளைஞரிடம் ஐஜி அஸ்ராகர்க் தலைமையில் தீவிர விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படட விவகாரத்தில் மேற்குவங்கத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை 13 நாட்களாக போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சம்பவத்தன்று அணிந்திருந்த அதே நிறத்தில் உள்ள டீ-சர்ட் அணிந்திருந்த மேற்குவங்கத்தை சேர்ந்த இளைஞரை, சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட குற்றவாளியிடம் வடக்குமண்டல ஐஜி அஸ்ராகர்க் தலைமையில் தீவிர விசாரணை நடந்துவருகிறது.
Tags : Intensive investigation led by IG Asragarh into a youth from West Bengal.