கழுத்தறுத்து கொலை

by Staff / 27-10-2022 12:33:43pm
 கழுத்தறுத்து கொலை

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தொட்டில் பட்டியை சேர்ந்தவர் ரகுநாதன். பெயிண்டரான இவர் அவ்வப்போது ஒரு கும்பலுடன் சேர்ந்து கொண்டு ரவுடிச வேலைகளையும் செய்து வந்துள்ளார். இவரது நண்பரான செண்ட்ரிங் வேலை பார்க்கும் வெள்ளையன் என்பவரும் ரவுடியாக இருந்து வந்துள்ளார். இருவரும் ஆரம்பத்தில் ஒரே கும்பலில் வேலை பார்த்து வந்த நிலையில், சமீபத்தில் ரகு அந்த கும்பலை விட்டு விலகி வேறு ரவுடி கும்பலோடு சேர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரகுவுக்கும், வெள்ளையனுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் சம்பவத்தன்று மருத்துவமனையில் வைத்து வெள்ளையன் கும்பல் ரகுவை சரமாரியாக தாக்கியதோடு பலர் முன்னிலையில் கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ள நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo