சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் பலி.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டி கோகுலேஸ் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து நடந்துள்ளது. பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் பெரும் புகை சூழ்ந்துள்ளது. பயங்கர வெடிவிபத்தில் 5 தொழிலாளர்கள் பலியானதாக வெளியாகியுள்ளன. 3 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதி; பட்டாசு ஆலையில் வெடி விபத்தால் ஏற்பட்ட தீயை தீயணைத் துறையினர் அணைத்து வருகின்றனர் மேலும் பல தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது.
Tags : 5 killed in massive explosion at Sivakasi cracker factory