வரலாற்றில் இன்று  28 ஆகஸ்ட் 2022-ஞாயிறு

by Editor / 28-08-2022 08:58:19am
வரலாற்றில் இன்று  28 ஆகஸ்ட் 2022-ஞாயிறு

632 : முகமது நபியின் மகள் பாத்திமா காலமானார்.

1511 : போர்ச்சுகீஸ் மலாக்காவைக் கைப்பற்றியது.

1609 : ஹென்றி ஹட்சன் டெலாவர் விரிகுடாவைக் கண்டுபிடித்தார்.

1709 : மணிப்பூர் மன்னராக பம்ஹீபா முடிசூடினார்.

1757 : முதலாவது நாணயம் கல்கத்தாவில் வார்க்கப்பட்டது.

1789 : சனிக்கோளின் எல்சலடஸ் என்ற புதிய சந்திரனை வில்லியம் ஹெர்ஷல் கண்டுபிடித்தார்.

1844 : ஏங்கல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் பாரிஸில் சந்தித்தனர்.

1845 : சயின்டிபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளியானது. 

1849 : ஒரு மாத கால முற்றுகையின் பின்னர் ஆஸ்திரியா வெனிஸ் நகரைக் கைப்பற்றியது. 

1867 : அமெரிக்கா ஆளில்லா மிட்வே தீவுகளைக் கைப்பற்றியது. 

நாகை மாவட்டத்தில் அமைந்திருந்த சூளாமணி புத்த விகாரத்தை இடிக்க ஆங்கிலேய அரசு உத்தரவிட்டது.

1879 : சூலுக்களின் கடைசி மன்னர் செட்சுவாயோ  பிரிட்டிஷாரால் சிறை பிடிக்கப்பட்டார்.

1898 : காலேப் பிராதமின் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்.

1901 : சில்லிமான் பல்கலைக்கழகம் பிலிப்பைன்ஸில் நிறுவப்பட்டது.

1913 : நெதர்லாந்தின் அரசி வில்ஹெல் மினா, டென்ஹாக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார் .

1914 : முதல் உலகப்போர்:- ஜெர்மனிப் படைகள் பெல்ஜியத்தில் நாமூர் நகரைக் கைப்பற்றின.

1916 : முதலாம் உலகப் போர்:- ஜெர்மனி ருமேனியா மீதும், இத்தாலி ஜெர்மனி மீதும் போரை ஆரம்பித்தன.

1922 : ஜப்பான் சைபீரியாவில் இருந்து தனது படைகளை விலக்க சம்மதித்தது.

1924 : சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜார்ஜியர்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.

1931 : ரஷ்யாவும், பிரான்சும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

1943 : நாஜி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக டென்மார்க்கில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது.
அடுத்த நாள் அங்கு ராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

1944 : இரண்டாம் உலகப் போர் :- மார்சேய், டூலோன் ஆகியன விடுவிக்கப்பட்டன.

1963 : வாஷிங்டனில் நடந்த பொதுக்கூட்டத்தில் மார்ட்டின் லூதர்கிங் என் கனவு யாதெனில் என்ற சொற்பொழிவாற்றினார். 

1964 : அமெரிக்கா, பிலடெல்பியாவில் இனக்கலவரம் ஆரம்பித்தது .

1968 : சிகாகோவில் ஜனநாயகவாதிகளின் தேசிய மாநாட்டின் போது கலவரம் வெடித்தது.

1973 : மெக்ஸிகோவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 500 பேர் வரை உயிரிழந்தனர் .

1988 : ஜெர்மனியில் வான வேடிக்கை விழாவின் போது மூன்று விமானங்கள் மோதி பார்வையாளர்கள் மீது விழுந்ததில் 75 பேர் உயிரிழந்தனர். 
346 பேர் படுகாயமடைந்தனர்.

1990 : குவைத்தை தனது புதிய மாகாணமாக ஈராக் அறிவித்தது.

1990 : சுழல் காற்று அமெரிக்காவின் இலினொய் மாநில நகரங்களைத் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர்.

1991 : சோவியத்திடம் இருந்து உக்ரைன் விடுதலை பெற்றது.

1993 : கலிலியோ விண்கலம் டாக்டைல் என்று பின்னர் பெயரிடப்பட்ட சந்திரன் ஒன்றைக் கண்டுபிடித்தது.

1996 : சென்னை கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்பட்டது.

வேல்ஸ் இளவரசர் சார்லஸ், இளவரசி டயானா மணமுறிவு ஏற்பட்டது.

1998 : இரண்டாவது காங்கோ போர் :- காங்கோ ராணுவம்
அங்கோலா, ஜிம்பாப்வே படைகளின் உதவியுடன் 
கின்சாசா மீதான ருவாண்டாவின் தாக்குதலை முறியடித்து.

பாகிஸ்தானின் நாடாளுமன்றம் திருக்குர் ஆன், நபிவழி ஆகியவை அதியுயர் சட்டம் என அறிவித்தது.
இச்சட்ட மூலத்தை பாகிஸ்தான் மேலவை நிராகரித்தது.

2006 : திருகோணமலை, சம்பூரில் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையில் பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன.

2011 : ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டோரைத்   தூக்கிலிடக் கூடாது எனக் கோரி காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற 21 வயது பெண் போராளி தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

 

Tags :

Share via