சென்னை கொண்டு வரப்பட்டது பவதாரிணி உடல்

மறைந்த பாடகி பவதாரிணி உடல் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானத்தில் இன்று சென்னை கொண்டு வரப்பட்டது. விமான நிலைய நடைமுறைகள் முடிந்த பின், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. பவதாரிணியின் உடலை பெற்றுக் கொள்ள அவரது மூத்த சகோதரர் கார்த்திக் ராஜா மற்றும் சுப்பு பஞ்சு சென்னை விமான நிலையம் வருகை தந்துள்ளனர். தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி காலமானார்.
Tags :