தவெக மாநாடு அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றிய போலீஸ்.

by Editor / 26-10-2024 10:10:47am
தவெக மாநாடு அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றிய போலீஸ்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநாடு நாளை (அக்.27) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநாட்டிற்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றினர். தொடர்ந்து, போலீசின் அனுமதி பெற்ற பிறகு பேனர்கள் வைக்க தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, அகற்றப்பட்ட பேனர்களை வைக்க நிர்வாகிகள் அனுமதி கேட்டுள்ளனர்.

 

Tags : தவெக மாநாடு அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றிய போலீஸ்.

Share via

More stories