லாரி மீது கார் மோதி 2 பேர் பலி
தெலுங்கானா மாநிலம் ஜனகோன் மாவட்டம் ரகுநாதப்பள்ளியில் பயங்கர சாலை விபத்து ஒன்று நடந்தது. இன்று அதிகாலை ரகுநாதப்பள்ளி டோல்கேட் பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக வந்த கார் மோதி விபத்துள்ளானது. இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் ஹனுமகொண்டா பகுதியை சேர்ந்த ராகேஷ் என அடையாளம் காணப்பட்டார்.
Tags :














.jpg)




