இன்று இந்திய நாடாளு மன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
இன்று இந்திய நாடாளு மன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது ,இந்தக் கூட்டத் தொடர் டிசம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ளது 1.5 அமர்வுகள் இதில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளனர். மத்திய அரசு 10 புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.. இதில், சிவில் அணுசக்தி துறையை தனியார் வசம் ஒப்படைப்பது தொடர்பான மசோதாவும் அடங்கும். நேற்று ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மக்களவை மாநிலங்களவை சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Tags :


















