இன்று முதல் கார் , இருசக்கர வாகனத்தை பதிவு செய்ய ஆஈ்.டி.ஒஅலுவலம் செல்லவேண்டாம்.
இன்று முதல் சொந்த பயன்பாட்டிற்கான கார் , இருசக்கர வாகனத்தை பதிவு செய்வதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் எடுத்துச் சென்று பதிவு செய்யும் முறையை மாற்றி வாகனங்களை விற்பனையாளர்களே பதிவு செய்யும் முறையை அரசு அளித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இது ஒயிட் போர்டு என்று சொல்லப்படுகிற தனிநபர் இருசக்கர வாகனம்,காருக்கானது ..வாடகை கார்களுக்கு அதாவது , மஞ்சள் போர்டு கார்களுக்கு -வணிகப் பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு .இது பொருந்தாது., கட்டாயம் ,நேரில் எடுத்து வந்து பதிவு செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் இந்த புதிய உத்தரவை இன்று முதல் அமுல்படுத்த வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Tags :



.jpg)















