முன்னாள் தபால் துறை ஊழியர் தற்கொலை

by Staff / 27-02-2025 05:35:37pm
 முன்னாள் தபால் துறை ஊழியர் தற்கொலை

திருவட்டாறு அருகே கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (65). தபால் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகிறார். மகனும் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். ஹரிஹரன் மறையும் வீட்டில் வசித்து வந்தனர். ஹரிஹரனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. நேற்று தனது மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் வீட்டின் அறைக்குள் சென்று கதவை மூடினார். மிகவும் நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. 

இதனால் சந்தேகம் அடைந்த மனைவி ஜன்னல் வழியாக பார்த்தபோது மின்விசிறி கொக்கியில் கயிறுகட்டி அதில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆற்றூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது ஹரிஹரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரியவந்தது. இதுதொடர்பாக அவரது மனைவி திருவட்டாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

Tags :

Share via