அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது செல்லும்-சென்னை உயர்நீதிமன்றம்.

by Staff / 04-09-2025 01:34:27pm
 அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது செல்லும்-சென்னை உயர்நீதிமன்றம்.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிராக திண்டுக்கல்லை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில், இபிஎஸ்-ன் கோரிக்கையை ஏற்று, மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

Tags : அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது செல்லும்-சென்னை உயர்நீதிமன்றம்.

Share via