ஆவின் முறைகேடு:ரூ.5.93 கோடிக்கு ஆவணங்கள் மாயம்

ஆவின் முறைகேடுகளை தோண்ட, தோண்ட பல்வேறு விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது ஆவினுக்கு விளம்பரம் செலவு செய்ததில் ஒரு தொகையும், கணக்கு காட்டியதில் ஒரு தொகையும் என முரண்பாடாக உள்ளது. ரூ.10.37 கோடி செலவில் ரூ.4.44 கோடிக்கு மட்டுமே ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.
ரூ.5.93 கோடிக்கு ஆவணங்கள் மாயமாகி உள்ளது என்ற பகீர் தகவல் தெரியவந்துள்ளது. அந்த ரூ.5.93 கோடி செலவுக்கான ஆவணங்கள் அழிக்கப்பட்டு இருப்பது அல்லது தொலைக்கப்பட்டு இருப்பது விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது. இந்த முறைகேடுகளில் தொடர்புடைய பால் கூட்டுறவு தணிக்கை துறை இயக்குனர் பிரமிளா, அதிகாரிகள் லோகநாதன், ருஷ்யாராணி, ஜெயபாலன், சந்திரசேகரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரம் உள்ளது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறி இருந்தார். இவ்வாறு ஆவின் முறைகேடுகள் தொடர்ந்து அம்பலமாகி வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Tags :