மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டாஸ்

by Staff / 16-02-2023 01:40:41pm
 மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டாஸ்

தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சுகாதாரத் துறை செயலாளர் பி.செந்தில்குமார் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விதிகளுக்குப் புறம்பாக மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறைபடுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக மருத்துவ கழிவுகளை தொடர்ச்சியாக கொட்டுவதால் ஏற்படும் அச்சுறுத்தல் மிகவும் ஆபத்தானது. மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் சட்டவிரோதமாக கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி விரிவுபடுத்தலாம் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்து தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

கடந்த 2021-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் தென்காசி, பொள்ளாச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக கேரளாவிலிருந்து லாரிகளில் எடுத்துவரப்பட்டு  கழிவுகள் கொட்டப்பட்டன.ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது

 

Tags :

Share via