12 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு

by Staff / 28-02-2023 11:46:49am
12 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு

உலக அளவில் பல நிறுவனங்கள் பொருளாதார மந்த நிலை காரணமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான தேல்ஸ் குழுமம் பரபரப்பு விஷயத்தை வெளியிட்டுள்ளது. விண்வெளி, பாதுகாப்பு, டிஜிட்டல் அடையாளம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் இந்த ஆண்டு 12 ஆயிரம் புதிய பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று அது கூறியுள்ளது. பிரான்சில் 5,500 புதிய பணியாளர்களையும், இந்தியாவில் 550 மற்றும் அமெரிக்காவில் 540 பணியாளர்களையும் பணியமர்த்த எதிர்பார்க்கிறது.

 

Tags :

Share via