கோவை - ஈரோட்டில் இரண்டு நாள் கள ஆய்வு நடத்த உள்ளார் தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்

by Admin / 22-11-2025 05:57:06pm
கோவை - ஈரோட்டில் இரண்டு நாள் கள ஆய்வு நடத்த உள்ளார் தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 25, ,26 ஆகியது தேதிகளில் இரண்டு நாள் கள ஆய்வை மேற்கொள்ள கோவை மற்றும் ஈரோட்டிற்கு பயணப்பட உள்ளார்.. கோவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை காலையில் திறந்து வைத்து ,பின்னர் தொழில்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் தனியார். நிறுவனங்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்விலும் கலந்து கொள்ள உள்ளார்.. இதனைத் தொடர்ந்து மறுநாள் ஈரோடு மாவட்டத்தில் : 605 கோடி மதிப்பீட்டில் நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதோடு, மொடக்குறிச்சி பகுதியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்தி பொல்லான் பகடை மணிமண்டபத்தையும் சித்தோடு பகுதியில் பால்வள தந்தை எஸ் .கே .பரமேஸ்வரன் சிலையையும் திறந்து வைக்கிறார்..

 

 

Tags :

Share via