மதுபடுத்தும் பாடு தந்தையிடம் குடிக்க பணம் கேட்டு வெட்ட முயன்ற மகனை கொலை செய்த தந்தை

by Editor / 18-09-2022 09:24:27am
மதுபடுத்தும் பாடு தந்தையிடம் குடிக்க பணம் கேட்டு வெட்ட முயன்ற மகனை கொலை செய்த தந்தை

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூர் அருகே காட்டுராமன்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ்(53) பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவருடைய இளைய மகன் முத்துக்குமார் (26) வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் முத்துக்குமார் மது அருந்திவிட்டு அடிக்கடி வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. வழக்கம் போல இரவு மது அருந்தி விட்டு வந்த முத்துக்குமார், தனது தந்தைமுத்துராஜ் யிடம் தகராறு செய்துள்ளார். மேலும் மது அருந்த பணம் வேண்டும் என கேட்டுள்ளார். தந்தை முத்துராஜ் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த முத்துக்குமார் தான் வைத்திருந்த அரிவாளை கொண்டு தந்தையை வெட்ட முயன்றுள்ளார். சுதாரித்துக் கொண்ட முத்துராஜ்  மகனை கீழே தள்ளிவிட்டு மகன் முத்துக்குமார்  வைத்திருந்த அரிவாளை பறித்து  மகனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. கழுத்து பகுதியில் வெட்டுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து முத்துக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மகனை கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள  தந்தை முத்துராஜை போலீசார் தேடி வருகின்றனர்.


 

 

Tags :

Share via

More stories