பதற்றம் இருந்தால் சீனாவுடன் ஏன் வர்த்தகம் கெஜ்ரிவால்

by Staff / 15-12-2022 11:51:04am
பதற்றம் இருந்தால் சீனாவுடன் ஏன் வர்த்தகம் கெஜ்ரிவால்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவும் வேளையில், அந்நாட்டுடன் வர்த்தகம் மட்டும் ஏன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை கேள்வி எழுப்பியுள்ளார்.சீனாவில் இருந்து ஏன் இறக்குமதியை ரத்து செய்யக்கூடாது? சீனாவின் வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் அந்த நாட்டுக்கு உரிய பாடம் புகட்ட முடியும். அங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. பிறகு ஏன் இந்த நிலை என்றார். முன்னதாக, அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் சமீபத்தில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo