மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டர் ஹேக்கர்ஸ் கையில்

by Admin / 04-09-2022 10:22:36am
மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டர் ஹேக்கர்ஸ் கையில்


 

பிரபலமானவர்கள் தங்கள் கருத்துக்களை நேரடியாக வெளியிடும் தளமாக ட்விட்டர் உள்ளது.இதில் ,உலகத்தின் அனைத்து அரசியல்,திரைஉலகத்தினர்,தொழிலதிபர்கள்,பிரதமர்,நாட்டின் அதிபர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள்,அமைச்சர்கள் தங்களுக்கென்று தனித்த பக்கங்களைச்செயல்பாட்டில் வைத்து தம் நிகழ்வுகளை வெளியிட்டு வருகின்றனர்.தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கத்தில்  அவர் சார்ந்த துறை  நிகழ்வுகளை பதிவிட்டு வந்தார். இந்நிலையில், அவர்  ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர்கள்  ஹேக் செய்து  வேரியோரியஸ்(variorius) என பெயர்  மாற்றி, கிரிப்டோகரன்ஸி  மூலம் அனைவரிடமும் நிதி திரட்டி ,கொரோனாவால்  பாதிக்கப்பட்டோர்களுக்கு உதவ ,நிதி திரட்ட  பயன்படுத்துவதாக பதிவிட்டுள்ளனர்.  தம் ட்விட்டரை மீட்கும் முயற்சியில் அமைச்சர் முயன்றுவருவதாக தகவல்.

மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டர் ஹேக்கர்ஸ் கையில்
 

Tags :

Share via

More stories