ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 22 பேர் பலி

சீனாவின் லியோவோனிங் மாகாணத்தில் இயங்கி வந்த ஹோட்டலில் இன்று (ஏப்.29) ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். தீ விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் குறித்து லியோவோனிங் மாகாண போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சீனாவில் இந்த ஆண்டு நடந்த மிக மோசமான தீ விபத்து இதுவாகும். அதிபர் ஜி ஜின்பிங் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
Tags :