கொரோனா நிவாரண நிதி: சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், முதற்கட்டமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படுகிறது.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பணகுடி நியாய விலைக்கடையில் சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார், தொடர்ந்து வள்ளியூர், திசையன்விளை அருகே அப்புவிளை, நவ்வலடி, இடிந்தகரை , ராதாபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதியை வழங்கினார்.
இதனிடையே திசையன்விளையில் உள்ள 30 படுக்கைகள் கொண்ட அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையை தரம். உயர்த்தி அரசு மருத்துவமனையாக மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து அங்கு சென்று பார்வையிட்டார்.
Tags :



















