ஆசிய வில்வித்தை: இந்தியாவுக்கு தங்கம்

தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு நேற்று 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்த நிலையில், இன்று இந்தியா அடுத்தடுத்து 2 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. காம்பவுண்ட் ஆடவா் அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் இந்தியாவின் அபிஷேக் வா்மா, பிரதமேஷ் ஃபுகே, பிரியன்ஷ் ஆகியோா் கூட்டணி வெற்றி பெற்றது. மகளிர் காம்பவுண்ட் பிரிவு இறுதிப்போட்டியில், ஜோதி வென்னம், அதிதி கோஸ்வாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகியோர் சிறப்பாக விளையாடி 234-233 என புள்ளி கணக்கில் வெற்றிபெற்றனர். அதேபோல், கலப்பு பிரிவு போட்டியில் அதிதி கோஸ்வாமி மற்றும் பிரியன்ஷ் 56-151 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று அசத்தினார்.
Tags :