பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

by Admin / 25-02-2026 10:23:27am
பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஐ.சி.சி  2026 டி-20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில்,  இலங்கை ,கண்டியில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடந்த  போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணியாக மாறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார்.இங்கிலாந்து தரப்பில் லியாம் டாசன் 24 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 பந்துகளில் 100 ரன்கள் (10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் ஷா அப்ரிடி சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஆனால் அது வெற்றியைத் தேடித்தரப் போதுமானதாக இல்லை. 

 

Tags :

Share via