இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலம்

இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலமாக மிசோரம் விளங்குவதாக, குருகிராமை சேர்ந்த பேராசிரியர் ராஜேஷ் மேற்கொண்ட ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, குடும்ப உறவுகள், பணி, சமூக பிரச்னைகள், மதம், உடல் மற்றும் மன நலம் உள்ளிட்ட அளவுகோல்களை பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில், இந்தியாவில் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற இரண்டாவது மாநிலமாக மிசோரம் மாநிலம் திகழ்கிறது. மேலும், இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும், மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :