தமிழ்நாட்டில் 3 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு ஆரஞ்சு எச்சரிக்கை.

by Staff / 02-08-2025 08:33:56am
தமிழ்நாட்டில் 3 நாட்கள்  மிக கனமழைக்கு வாய்ப்பு ஆரஞ்சு எச்சரிக்கை.

தமிழ்நாட்டில் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 12 செ.மீ., முதல் 20 செ.மீ., வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆகஸ்ட் 3, 4, 5 ஆகிய 3 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இன்று (ஆக.2) மற்றும் 6, 7, 8 ஆகிய தேதிகளில் 7 முதல் 11 செ.மீ., வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 4 நாட்கள் ஒருசில பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில் 3 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு ஆரஞ்சு எச்சரிக்கை.

Share via