திண்டுக்கல் அருகே மேம்பாலத்தில் இருந்து விழுந்த பெட்ரோல் டேங்கர் லாரி - டிரைவர் பலி
மதுரையில் இருந்து பெங்களூரு சென்ற இந்தியன் ஆயில் பெட்ரோல் டேங்கர் லாரி திண்டுக்கல் பழனி பைபாஸ் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது லாரி டயர் வெடித்ததில் பழனி ரோடு மேம்பாலத்தில் இருந்து டேங்கர் லாரி கீழே விழுந்தது.இதில் டிரைவர் கர்நாடகாவை சேர்ந்த சந்திரசேகர் (60) பலியானார்.அவர் உடன் இருந்த, ஓசூர் பின்னமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கிரண்(35) என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags : திண்டுக்கல் அருகே மேம்பாலத்தில் இருந்து விழுந்த பெட்ரோல் டேங்கர் லாரி - டிரைவர் பலி



















