கிராம உதவியாளர் உட்பட 2 பேர் கைது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பட்டா மாற்றம் செய்து தருவதற்கு ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக உதவியாளர் உள்பட இருவரை ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.
செங்கத்தை அடுத்த செ. அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்பசிவம் மகன் அஜித் (29). இவர், சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். சாம்பசிவம் காலமானதைத்தொடர்ந்து, அவரது பெயரில் உள்ள நிலம், வீடு ஆகியவற்றை தனது தாயின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தரவும், நிலத்தை அளவீடு செய்யவும் பெரும்பாக்கம் கிராம நிர்வாக அலுவலரிடம் அஜிதம் மனு அளித்தார்.
இதற்கு கிராம நிர்வாக உதவியாளர் அரிகிருஷ்ணன் ரூ. 15 ஆயிரம் கேட்டாராம். இதுகுறித்து மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீசாரிடம் அஜித் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், ரசாயனம் தடவிய ரூ. 15 ஆயிரத்தை கிராம நிர்வாக உதவியாளர் அரிகிருஷ்ணனிடம் அஜித் கொடுத்தார். இதைத்தொடர்ந்து அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அரிகிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
Tags : கிராம உதவியாளர் உட்பட 2 பேர் கைது