பாஜக வேட்பாளர்களுக்கு ரூ.260 கோடி செலவா? எஸ்.வி.சேகர் பேச்சால் பரபரப்பு
தமிழக தேர்தலில் 20 பாஜக வேட்பாளர்களுக்குரூ.260 கோடி செலவிடப்பட்டுள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களில் தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த நிலையில்
சட்டப்பேரவை தேர்தல் குறித்து சமூக வலைத்தளமானடுவிட்டர் ஸ்பேசில் . பாஜக ஆதரவாளர்கள் இடையே இந்த உரையாடல் நடந்தது. பாஜக ஆதரவாளர்கள் என்பதால் அவர்களுக்குளு வெளிப்படையாக பேசிக்கொண்டார்கள். உரையாடலின்போது பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், சட்டன்ற தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் 13 கோடி ரூபாய் கொடுத்திருக்காங்க என்று தான் கேள்விப்பட்டதாக தெரிவித்திருந்தார். அவர் மேலும், தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், தோல்வி அடைந்தவர்களும் கட்சிக்கு முறையாக கணக்கு கொடுத்திருக்கிறார்களா? கொடுக்க வேண்டும் இல்லையா?என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.இந்த பேச்சு லீக் ஆகி சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப்பொருள் ஆனது. ஒரு வேட்பாளருக்கு 13கோடி என்றால் பாஜக சார்பில் 20 வேட்பாளர்கள் களம் இறங்கியிருந்தார்கள். அப்படி என்றால் 20 வேட்பாளர்களுக்கும் 260 கோடி ரூபாய் பாஜக செலவிட்டுள்ளது அம்பலமாகியிருக்கிறது என்று பலரும் தகவல் பரப்பி வருகின்றனர். மேலும் அந்த பணம் யாரால் எங்கிருந்து கொடுக்கப்பட்டது என்று நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரிக்கவேண்டும். எஸ்.வி.சேகர் அழைத்து விசாரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Tags :