பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்று வரும் சிறப்பு ஆட்டுச் சந்தை.

by Staff / 06-06-2025 09:53:17am
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்று வரும் சிறப்பு ஆட்டுச் சந்தை.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்று வரும் சிறப்பு ஆட்டுச் சந்தை - போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் செல்லும் இஸ்லாமிய பெருமக்கள்.


பக்ரீத் பண்டிகையானது நாளைய தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், ஈகைத் திருநாளை மாமிசங்களுடன் கொண்டாடுவதற்காக ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் ஆடுகளை வாங்கி சென்று வருகின்றனர்.

 அந்த வகையில், வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பாம்பு கோயில் ஆட்டு சந்தையானது நாளைய தினம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சிறப்பு ஆட்டுச் சந்தையானது இன்று பாம்பு கோயில் ஆட்டுச் சந்தையில் நடைபெற்று வருகிறது.

தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய சந்தைகளில் ஒன்றான தென்காசி மாவட்டம், பாம்புகோவில் ஆட்டுச் சந்தையில் இன்று நடைபெற்று வரும் சிறப்பு ஆட்டு சந்தையில் தென்காசி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், ஏராளமான இஸ்லாமிய பெருமக்களும் பங்கேற்று போட்டி போட்டு கொண்டு ஆடுகளை வாங்கி சென்று வரும் நிலையில், தரத்திற்கு ஏற்றார் போல் ஆடுகளின் விலையானது ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை விற்பனையாகி வருவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 மேலும், இன்றைய தினம் நடைபெற்று வரும் சிறப்பு ஆட்டுச் சந்தையில் ஏராளமான வியாபாரிகளும் தங்களது ஆடுகளை விற்பனை செய்வதற்காக குவிந்துள்ள நிலையில், இந்த சிறப்பு ஆட்டுச் சந்தையானது களைகட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்று வரும் சிறப்பு ஆட்டுச் சந்தை.

Share via