தங்க நகைக்கு ‘ஒரே இந்தியா – ஒரே விலை’ செபி அமைப்பு வலியுறுத்தல்

by Editor / 03-10-2021 05:31:25pm
தங்க நகைக்கு ‘ஒரே இந்தியா – ஒரே விலை’ செபி அமைப்பு வலியுறுத்தல்

தங்க நகைப் பரிமாற்றத்துக்கென செபியின் அனுமதி கிடைத்துள்ள காரணத்தால் ஒளிவு மறைவற்ற தங்க விலை உடனடி ரொக்க மதிப்பு மற்றும் தரமான தங்கம் கிடைப்பது ஆகியவை உறுதி செய்யப்படும். மேலும் நாடெங்கிலும் ஒரே சீரான தங்க நகை விலை அமலாவதும் இதன் மூலம் சாத்தியமாகும். தாங்கள் தரும் பணத்துக்கான தரமான தங்கம் கிடைக்கும் என்கிற உத்தரவாதம் வாடிக்கையாளர்களுக்கு இருப்பதால் இத்தொழிலில் முதலீடு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.

மலபார் கோல்டு - டைமண்ட்ஸ் நறுவனமானது ஏற்கனவே ஒரே இந்தியா, ஒரே தங்க விலை" என்ற தனது விற்பனை உத்தியை அறிகம் செய்துள்ளது. இந்தியா ழுவதிலும் அமைந்துள்ள எமது சில்லறை விற்பனை நிலையங்களில் 100% ஹால்மார்க் நகைகளுக்கு ஒரே விலை தான் விதிக்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டு இதை செய்து வரும் நாம் இதன் மூலம் சீரான தங்க விலை நிர்ணயிப்பது சாத்தியமே என்று நிரூபித்து வருகிறோம். சர்வதேச அளவில் நிர்ணயம் செய்யப்படும் தங்க நகை விலை நாடு ழுவதற்கும் பொருந்தும். இரண்டாவதாக, சுங்கவரி அதே தான். மேலும் ஜிஎஸ்டி வட்டி விகிதங்களும் நாடு முழுதும் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்படி சீராகவே உள்ளன. ஆக, வெவ்வேறு மாநலங்களில் விலை வெவ்வேறாக இருப்பதற்கு எந்த சரியான காரணம் இருப்பதாகத் தோன்றவில்லை.

தங்க வர்த்தகத்தில் ஒளிவு மறைவற்ற நிலை இருந்தாக வேண்டுமென்ற தன் நோக்கத்தை செபி தெரிவித்துள்ளது. இந்த முடிவை வரவேற்கும் நாங்கள் இந்நோக்கத்தை நிறைவேற்ற வேண்டுமானால் நாட்டில் அதிகாரபூர்வமற்ற ஆபரண உற்பத்தி நடப்பதைத் தடுத்தாக வேண்டியது அவசியம் என்று நம்புகிறோம். இவ்வகை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுடன் சேர்த்து, சுங்க வரியைக் குறைத்து தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும்.

உலகத் தங்கக் கவுன்சிலைப் பொறுத்தவரை இந்தியாவில் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அளவு 25 ஆயிரம் டன்னுக்கு மேலானது. இந்திய ரிசர்வ் வங்கியிடமே இந்த அளவுக்குத் தங்கம் கிடையாது. வீட்டு முதலீட்டாளர்களும், நாடும் ஆதாயம் பெறும்படியான ஒரு உத்தியை மத்திய அரசு வெளியிட்டால், இது உண்மையாக நமது ரூபாய்க்கு வலுவூட்டும் என்கிறார் எம்.பி. அகமது

 

Tags :

Share via