அதிகரிக்கும் மாணவர்களின் தற்கொலை
2021ஆம் ஆண்டில் நாட்டில் மட்டும் 13,089 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக என்சிஆர்பி புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை 'உலக தற்கொலை தடுப்பு தினத்தை' முன்னிட்டு என்சிஆர்பி வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, பத்தாண்டுகளில் மாணவர்களின் தற்கொலைகள் 70 சதவீதம் அதிகரித்துள்ளன. அதற்கான முக்கிய காரணங்கள் குடும்ப பிரச்னைகள், காதல் விவகாரங்கள், நோய் மற்றும் தோல்வி பயம் என பல்வேறு காரணங்கள் ஆகும். 2011இல் 7,696 பேரும், 2013இல் 8,423 பேரும், 2015இல் 8,934 பேரும், 2017இல் 9,905 பேரும், 2019இல் 10,335 பேரும், 2021இல் 13,089 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.
Tags :