இந்திய அரசின் கோவின் இணைய தளத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் அதற்கான சான்றிதழை இந்திய அரசின் கோவின் இணைய தளத்தில் இருந்து தொலைப்பேசி எண் மூலம் பெற்றுக்கொள்ளும் வகையில் வகை செய்யப்பட்டிருக்கிறது.அதில் மொழிகளுக்கான தேடலில் புதிதாக ஒன்பது இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் செம்மொழியான தமிழ் மொழியை ஒன்றிய அரசு புறக்கணித்துள்ளது.
இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டு வர பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் தங்களுடைய காழ்ப்புணர்ச்சியை கொரோனா தடுப்பூசி இணைய தளத்திலும் மோடி அரசு கையாண்டிருப்பது கடும் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.
இப்படியான மனநிலையை ஒன்றிய பாஜக அரசு எப்போதுதான் விட்டொழிக்கப் போகிறது என்றும் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
Tags :