உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டி தப்பி ஓட முயன்ற குற்றவாளிக்கு துப்பாக்கிசூடு.

by Editor / 11-03-2023 11:51:26pm
உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டி தப்பி ஓட முயன்ற குற்றவாளிக்கு துப்பாக்கிசூடு.

திருவாரூர் மாவட்டம் பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராஜ்குமார் எட்டு பேர் கொண்ட கும்பலால் நேற்று கமலாபுரம் பகுதியில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்த ஸ்டாலின் பாரதி, வீரபாண்டியன், உள்ளிட்ட ஐந்து நபர்களை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அழகிரி காலனி பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவன் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் என்ற இடத்தில் தலைமறைவாக இருக்கிறது காவல்துறையினருக்கு தெரிய வந்தது 
அதனையடுத்து மணல்மேடு காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் பிரவினை பிடிக்க சென்ற பொழுது சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோவை அறிவாளால் வெட்டிவிட்டு பிரவீன் தப்பிக்க முயன்றுள்ளான். அதனையடுத்து ஆய்வாளர் ராஜேஷ் பிரவீனின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளார் காயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் குற்றவாளி பிரவீன் ஆகிய இருவரையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம்  அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories