தென் தமிழகத்தை அழிவிலிருந்து காக்க வேண்டும்: வைகோ

by Staff / 28-08-2023 01:01:50pm
தென் தமிழகத்தை அழிவிலிருந்து காக்க வேண்டும்: வைகோ

கூடங்குளம் அணு உலைகளால் தென் தமிழகமே அழிந்துபோகும் என்று நான் பலமுறைஎச்சரித்துள்ளேன். உதாராணத்துக்கு, ஜப்பானில் புகுசிமா அணு உலை அமைக்கப்பட்டபோதே மக்கள் எதிர்த்தார்கள். அமெரிக்காவில் 3 மைல் தீவில் அமைக்கப்பட்ட அணு உலையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

கூடங்குளம் அணுஉலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அணு உலைக் கழிவுநீரை வங்காள விரிகுடாவில்தான்திறந்துவிடுவார்கள். இதனால் இடிந்தகரை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்கள் அழிந்துபோகும். நம் தலை மீது பேராபத்து கத்திபோல் தொங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, கூடங்குளத்தில் அணு உலைகளை மூடுவதுஒன்றுதான், எதிர்காலத்தில் தென்தமிழகத்தைப் பாதுகாக்கும்.

நிலவில் கால் வைக்கலாம். ஆனால், தமிழகத்தின் ஒரு பகுதிஅழிந்துபோகும் என்பதை மத்தியஅரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றரை ஆண்டு காலம்இடிந்தகரை மக்கள் போராடினர். அரசுகள் கண்டு கொள்ளவில்லை.போராடியவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டன. என் மீதும்கூடஒரு வழக்கு இருக்கிறது. நான்அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. கூடங்குளம் அணுஉலைகளால் தென் தமிழகத்தின் ஒரு பகுதி அழிவுக்கு உள்ளாகும் என்றுமீண்டும் எச்சரிக்கிறேன். இவ்வாறுஅறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via