நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொடூரமாக கொலை செய்து மூட்டை கட்டி வீசிய கணவன்.

by Editor / 06-09-2022 02:11:22pm
நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொடூரமாக கொலை செய்து  மூட்டை கட்டி வீசிய கணவன்.

ராணிப்பேட்டை பூட்டுத்தாக்கு பெரிய தெரு பகுதியை சேர்ந்த தம்பதியர் ராமு - சரிதா தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் குழந்தை இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுவதும் மேலும் ராமு சரிதாவின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு பல முறை சண்டையிட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி ராமு ரத்தினகிரி காவல் நிலையத்தில் சென்று தனது மனைவி சரிதா காணவில்லை என புகார் அளித்தார். பின் ராமு கே.ஜிஎப் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ரத்தினகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ராமு குடியிருந்த வீட்டின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று பார்த்தபோது, வீட்டினுள் இருந்த தரை கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசப்பட்டு வருவதை கண்டறிந்தனர். கிணற்றுக்குள் இறங்கி தேடிப் பார்த்த போது சரிதாவின் உடல் துணிகளால் சுத்தப்பட்டு கயிறுகளால் கட்டியபடி கிணற்றில் சடலமாக கிடப்பதை போலீசார் கண்டறிந்தனர். இது குறித்து ராமுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் கொடூரமாக கொலை செய்து துணியால் மூட்டையாக கட்டி கிணற்றில் வீசி கொலை செய்தது தெரியவந்தது.

 

Tags :

Share via

More stories