கன்னியாகுமரி காவல்துறையின் புதிய வசதி தொடக்கம்-மக்கள் மகிழ்ச்சி.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை பொதுமக்கள் பின்னூட்ட( Feedback) மையம் என்ற புதிய சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் தங்கள் புகார் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தெரிந்து கொள்ளலாம். திருப்தி இல்லையெனில் அதில் தெரிவிக்கலாம்.
தொடர்பு எண்கள்: புகார் தொடர்புக்கு: 8122223319,Feedback வழங்க: 7708239100, 6385211224 (WhatsApp வழியும் தொடர்பு கொள்ளலாம்) விசாரணை சரிவர நடந்ததா? முடிவில் திருப்தியா? போன்ற கேள்விகளுக்கு பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்கப்படும். திருப்தி இல்லையெனில், புதிய அதிகாரி மூலம் விசாரணை நடத்தப்படும்.காவலர்களுக்கான புதிய எண்:பணியில் இருக்கும் காவலர்கள் தங்கள் குறைகளை பகிர 7540004651 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இந்த Feedback Centre 24 மணி நேரமும் செயல்படும். பொதுமக்கள், காவலர்கள் அனைவரும் இதில் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஆர்.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tags : கன்னியாகுமரி காவல்துறையின் புதிய வசதி தொடக்கம்-மக்கள் மகிழ்ச்சி.